பள்ளத்தில் இறங்கிய பெட்ரோல் லாரி 12 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் இருந்து பெட்ரோல், டீசல் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த லாரி திருச்சி மாவட்டத்தில் உள்ள இளங்காகுறிச்சி பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக லாரியின் முன்பக்க சக்கரம் சாலையோர பள்ளத்தில் இறங்கிவிட்டது.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிரேன் உதவியுடன் சுமார் 12 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பள்ளத்தில் இறங்கிய லாரியை மீட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.