கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த 7 உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் கிரிக்கெட் பயிற்சிக்காக ஒரு காரில் சேலம் நோக்கி சென்றனர். அங்கு பயிற்சியை முடித்துவிட்டு 7 பேரும் மீண்டும் அதே காரில் திருநெல்வேலிக்கு புறப்பட்டனர். இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள இந்திரா நகர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த 7 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.