Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த கார்…. 3 பேர் பலி;2 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் அ.தி.மு.க நிர்வாகிகளான சுரேஷ்பாபு, ரமேஷ் பாபு ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இருவரும் பொக்லைன் எந்திரங்களை சொந்தமாக வைத்து வாடகைக்கு விட்டு வந்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சுரேஷ், ரமேஷ், பொக்லைன் எந்திரம் ஓட்டுனர்களான ராஜவேல், வெங்கடேசன் மற்றும் சுதாகர் ஆகிய 5 பேரும் பொக்லைன் எந்திரத்தை வாங்குவதற்காக திண்டுக்கல்லுக்கு சென்றுள்ளனர். அங்கு பொக்லைன் எந்திரத்தை பார்த்துவிட்டு நேற்று முன்தினம் இரவு நேரத்தில் அனைவரும் காரில் வந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் மலையம்பாக்கம் அருகே அதிவேகமாக சென்றதால் கட்டுப்பாட்டை இழந்த கார் 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் சுரேஷ் பாபு, ரமேஷ்பாபு ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டனர். இதனை அடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ராஜவேல், சுதாகர், வெங்கடேசன் ஆகிய மூன்று பேரையும் போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுதாகர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |