அதிவேகமாக சென்ற சொகுசு கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகிய மண்டபத்தில் இருந்து நள்ளிரவு நேரத்தில் சொகுசு கார் ஒன்றை திங்கள்நகர் நோக்கி அதிவேகமாக சென்றுள்ளது. இந்நிலையில் பரப்பை என்ற இடத்தில் ரயில்வே மேம்பாலம் சீரமைப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனை கவனிக்காமல் அதிவேகமாக சென்ற சொகுசு கார் சுமார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்துவிட்டது.
இந்த விபத்தில் காரில் பயணித்த 5 பேர் படுகாயமடைந்தனர். இதனை பார்த்த வாகன ஓட்டிகள் படுகாயமடைந்த 5 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.