டிராக்டர் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உரத்துப்பட்டி கிராமத்தில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழரசன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தமிழரசன் ராமசாமி என்பவருக்கு சொந்தமான டிராக்டரில் கிராவல் மண்ணை அள்ளி கொண்டு சென்றுள்ளார். அப்போது திடீரென நிலைதடுமாறிய டிராக்டர் சாலையில் தாறுமாறாக ஓடி பள்ளத்தில் கவிழ்ந்துவிட்டது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த தமிழரசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தமிழரசனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மணல் கடத்துவதற்கு உதவியாக இருந்த ராமசாமியை கைது செய்ததோடு, டிராக்டர் பறிமுதல் செய்தனர்.