Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த பள்ளி வேன்…. திருமண நிகழ்ச்சிக்கு சென்ற 30 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

வேன் கவிழ்ந்து 30 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ராயப்பனூர் கிராமத்தை சேர்ந்த 29 பேர் தனியார் பள்ளி வேனில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஆலத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்த வேன் ஆலத்தூர் ஏரிக்கரை பகுதியில் சென்றபோது சங்கராபுரம் நோக்கி சென்ற லாரி வேனை முந்தி சென்றது. அப்போது எதிரே வாகனம் வந்ததால் விபத்து ஏற்படுவதை தடுக்க வேன் ஓட்டுநர் பிரேக் பிடித்துள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஜமுனா, சசிகலா, திவ்யபாரதி, ஜெயலட்சுமி, அஷிதா(3), தஸ்வின்(6) உள்பட 30 பேர் காயம் அடைந்தனர். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த 30 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |