புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கூழையன்காடு பகுதியில் நாகேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது நாகேந்திரனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் மோட்டார் சைக்கிளில் ஆலங்குடி மருத்துவமனை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த நாகேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நாகேந்திரனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.