Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

” சுமார் 15 அடி பள்ளம்”… டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி….. கோர விபத்தில் பறிபோன உயிர்..!!

நாமக்கல் மாவட்டத்தில் லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையிலுள்ள தடுப்புச் சுவரை உடைத்து பள்ளத்தில் பாய்ந்த விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்திலுள்ள அசக்காட்டுப்பட்டி பகுதியில் சபேசன் என்பவர் வசித்து வந்தார். அவர் அந்த பகுதியில் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தில் செல்லிப்பட்டிக்கு கட்டுமான பொருட்களை கொண்டு செல்லும் பணியை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சபேசன் கொல்லிமலையிலிருந்து ஒரு டிப்பர் லாரியில் பொருட்களை ஏற்றி மலை அடிவாரத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 15 அடி பள்ளத்தில் தடுப்புச்சுவரை உடைத்து பாய்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக சபேசன் இறந்து விட்டார். இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சபேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |