லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் கான்கார்டு சரக்கு பெட்டக முனையத்திற்கு லோடு ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி சென்றுள்ளது. இந்நிலையில் பக்கிங்காம் கால்வாய் சாலையில் உள்ள ரயில்வே பாதையை கடக்க முயற்சி செய்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி பின்னோக்கி நகர்ந்து சாலையோர பள்ளத்தில் இறங்கிவிட்டது.
மேலும் லாரியில் இருந்த கன்டெய்னர் பெட்டி பள்ளத்தில் விழுந்துவிட்டது. இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டார். இதுகுறித்து தகவலறிந்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.