Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் சிக்கிய பேருந்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 50 பயணிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

வாணியம்பாடி அருகில் உள்ள தரைப்பாலத்தின் பள்ளத்தில் பேருந்து சிக்கிய விபத்தில்  50 பயணிகள் அதிர்ஷ்டவசமாக  உயிர் தப்பினர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள செட்டியப்பணுர் அருகில் உள்ள கானாற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் தரைப்பாலத்தில் கடந்த நவம்பர் மாதம் பெய்த தொடர் மழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால்  தரை பாலத்தின் இரு பக்கமும் மண் அரிப்பு ஏற்பட்டு பாலம் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மேலும் அந்த பாலம் வழியாக செல்லும் வாகனங்கள்  செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நெடுஞ்சாலை துறையினர் பாலத்தின் இரு பக்கமும் ஏற்பட்டிருந்த மண்ணரிப்பை சரி செய்வதற்காக முரம்பு மண்ணை கொட்டி நிரப்பி தற்காலிமாக வாகனங்கள்   செல்வதற்கு முன்னேற்பாடு செய்து வைத்தனர். நேற்று திருப்பத்தூரில் இருந்து வாணியம்பாடி நோக்கி வந்த ஒரு தனியார் பஸ் தரை பாலத்தின் பக்கவாட்டில் கொட்டப்பட்டிருந்த மண் ரோட்டில் சரிந்து விபத்துக்குள்ளானது. அப்போது பேருந்தின் ஓட்டுநர்   சாமர்த்தியமாக பயணிகளை அவசர அவசரமாக கீழே இறக்கிவிட்டதால்  பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்ட்து.அதன்பின்  விபத்தில் சிக்கிய பேருந்தை மீட்கும் பணி  நடைபெற்று வந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |