சாலையில் உள்ள பள்ளத்தில் சிக்கி லாரி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோதையாறு அரசு ரப்பர் கழகத்திலிருந்து ரப்பர் மரத்தடிகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரி கோதமடங்கு பகுதியில் சென்ற போது எதிர்பாராதவிதமாக சாலையில் இருந்த பள்ளத்தில் இறங்கியது. மேலும் நிலைதடுமாறி லாரி ஒரு பக்கமாக சாய்ந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதனை அடுத்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் லாரியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அந்த சாலை மிகவும் சேதமடைந்து இருப்பதால் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுகிறது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.