Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்த லாரி…. டிரைவர்-கிளீனர் தப்பி ஓட்டம்…. சோதனையில் தெரிந்த உண்மை…!!

லாரி பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடியில் இருந்து நேற்று முன்தினம் இரவு நேரத்தில் லாரி ஒன்று வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் ஜமீன் பகுதியில் சென்ற போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது தேசிய நெடுஞ்சாலை ரோந்து பணி போலீசார் லாரி அருகே சென்று பார்த்தபோது ஓட்டுனரும், கிளீனரும் தப்பி ஓடினர்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் லாரியை சோதனை செய்தபோது 45 முட்டை ரேஷன் அரிசியை கடத்தி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய ஓட்டுநர் மற்றும் கிளீனரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |