Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. கோவையில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள செட்டிபாளையம் பகுதியில் சோமசுந்தரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்குவாரியில் காசாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் சோமசுந்தரம் தன்னுடன் வேலை பார்க்கும் கார்த்திக் மற்றும் ஸமாணிக்கம் ஆகிய ஊழியர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து குவாரியில் இருந்து சில மீட்டர் தொலைவில் சென்று கொண்டிருந்த போதே திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் நிலைதடுமாறி 20 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்துவிட்டது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த சோமசுந்தரம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் படுகாயமடைந்த கார்த்திக் மற்றும் மாணிக்கம் ஆகிய 2 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோமசுந்தரத்தின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |