பேருந்து பள்ளத்தில் பாய்ந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேட்டில் இருந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனியார் பேருந்து பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் அருகே சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்திற்குள் பாய்ந்தது.
இதனால் பயணிகள் அலறியடித்து கொண்டு அவசர கால கதவு வழியாக வெளியேற முய. ஆனால் அந்த வழி திறக்காததால் பயணிகள் முன்பக்க கண்ணாடி உடைத்து பத்திரமாக வெளியே சென்றனர். இதில் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து பயணிகள் மாற்று வாகனத்தில் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.