கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் பாய்ந்த விபத்தில் 40 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ஈரோடு மாவட்டத்தில் இருந்து 40 பயணிகளுடன் கர்நாடக மாநிலம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் செம்மண்திட்டு பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த பள்ளத்தில் பாய்ந்தது. அப்போது பேருந்து மணல்திட்டு மீது மோதி நின்றதால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனையடுத்து பயணிகள் மாற்று பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.