Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் ரத்த காயங்களுடன் கிடந்த நபர்…. கொலை செய்யப்பட்டாரா….? வெளியான சிசிடிவி காட்சிகள்…!!

நெல் அறுவடை எந்திர உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள தச்சூர் கிராமத்தில் கதிர்காமன்(47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெல் அறுவடை இயந்திரத்தை சொந்தமாக வைத்து வாடகைக்கு விட்டு தொழில் நடத்தி வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற கதிர்காமன் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். அப்போது எழுத்தூர் ஏரி அருகே இருக்கும் சாலையோர பள்ளத்தில் ரத்த காயங்களுடன் மயங்கி கிடந்த கதிர்காமனை உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கதிர்காமன் மயங்கி கிடந்த இடத்திற்கு அருகே இருக்கும் வீட்டில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது டிப்பர் லாரி ஒன்று அவ்வழியாக வேகமாக சென்றது கேமராவில் பதிவாகியது. எனவே விபத்தில் கதிர்காமன் உயிரிழந்தாரா? அல்லது தொழில் போட்டி காரணமாக திட்டமிட்டு யாரேனும் அவரை தாக்கி பள்ளத்தில் வீசி கொலை செய்தனரா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |