தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறந்த பிறகு உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ள வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த உத்தரவை ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்ட பிறகு வகுப்பறைக்குள் நுழைதல், வெளியேறுதல், கற்றல், பொருள்கள் மற்றும் புத்தகங்களை தொடுவதற்கு பதிலாக மாற்று வழியை பயன்படுத்துதல் போன்ற முக்கிய தருணங்களில் தவறாமல் கைகளை சானிடைசர் மூலம் கழுவுதல் போன்றவற்றை மாணவர்களுக்கு ஊக்குவிக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் கிருமிகள் பரவலை எதிர்த்துப் போராடுவதற்கும், மாணவர்கள், பள்ளி ஊழியர்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும் எளிதான வழிகளில் ஒன்று கை கழுவுதல் என்று குறிப்பிட்டுள்ளது.