Categories
மாநில செய்திகள்

பள்ளிகளில் இதற்கு…. கட்டணம் வசூலிக்க கூடாது…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள்  நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தபட உள்ளது.

இதனைத்தொடர்ந்து இன்று முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இந்நிலையில் தமிழகத்தில் 27 மாவட்டங்களில் அனைத்து வகுப்புகளுக்கும் 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கையை தொடங்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் எந்த நிபந்தனைகளின் அடிப்படையிலும் பள்ளியில் மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது என்றும் மாணவர் சேர்க்கையின் போது எந்த படிவத்திற்கும் கட்டணம் வசூல் செய்யக்கூடாது என்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories

Tech |