மாவட்ட ஆட்சியர் விஷ்ணு மாணவர்கள் புகார் தெரிவிக்க அரசு அளித்த எண்களை பள்ளியில் ஒட்ட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 300 மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள் மற்றும் சமூகஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
இதில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு மாணவ -மாணவிகள் சந்தித்து வரும் பாலியல் தொல்லைக்கு புகார் அளிக்கும் வகையில் பள்ளியில் உள்ள முகப்பு பகுதி, வகுப்பறை, கழிவறை, கலையரங்கம் என மாணவர்கள் செல்லும் இடங்களில் அரசு அறிவித்த இலவச செல்போன் எண்ணை பதாகைகளை ஒட்டு வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
மகளிர் பிரச்சினைகளுக்கு 181 என்ற எண்ணையும், மாணவர்கள் 1098 என்ற எண்ணையும் தொடர்பு கொண்டு தங்களது பிரச்சினைகளை தெரிவிக்கலாம் என கூறியுள்ளார். மேலும் ஆசிரியர்கள் கிராமப் பகுதிகளில் உள்ள முக்கிய நிர்வாகிகள் மற்றும் காவல்துறையினர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார்.