பாலியல் தொல்லை குறித்து மாணவர்கள் அச்சமின்றி தெரிவிக்க வேண்டும் என்பதற்காக பள்ளிகளில் புகார் பெட்டி வைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு, ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இந்த புகார்கள் அனைத்தும் தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளன. பெற்றோர்கள் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில், பாலியல் தொல்லை குறித்து மாணவர்கள் அச்சமின்றி தெரிவிக்க அனைத்து பள்ளிகளிலும் குழு அமைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமூக நலத்துறை அதிகாரி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக் குழு செயலர் அடங்கிய குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டிகள் அமைக்கவும் தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.