தமிழகத்தில் பொதுத்தேர்வுகள் முடிவடைந்து 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன. இதனையடுத்து மாணவர்கள் தங்களுடைய உயர்கல்வியை தேர்ந்தெடுத்து வருகின்றனர். இந்நிலையில் பத்து, பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூலை 25ஆம் தேதி முதல் துணைத்தேர்வு நடைபெற உள்ளது.
எனவே 10 12-ம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு அவரவர் பயின்ற பள்ளிகளில் மாலை நேர சிறப்பு வகுப்புகளை நடத்த வேண்டும். சிறப்பு வகுப்புகள் குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த முதன்மை அலுவலர்களுக்கு ஆணையிட்டுள்ளது.