தமிழக பள்ளிகளில் கலை பண்பாட்டு திருவிழாவிற்கான போட்டி தேதிகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கலை பண்பாட்டு திருவிழா போட்டிகளை நடத்துவதற்கான தேதிகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது. பள்ளி கல்வித்துறையின் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இயக்கம் சார்பாக அனைத்து வகை இடைநிலை மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் அல்லது படைப்பாற்றலை வளர்க்கவும் பாரம்பரிய கலைகளை இளம் தலைமுறைகளுடன் உயிர்ப்புடன் வைத்திருப்பதற்காகவும் வாய்ப்பாட்டீசை, கருவிசை, நடனம், காட்சிக்கலை என நான்கு தலைப்புகளில் கலை பண்பாட்டு திருவிழா போட்டிகள் கடந்த 2015 ஆம் வருடம் முதல் நடத்தப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் நிகழ் கல்வியாண்டில் மாணவர்களுக்கு 10 பிரிவுகளில் தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட இருக்கிறது. இந்த நிலையில் இந்த வருடத்திற்கான பள்ளி மாவட்ட மற்றும் மாநில அளவிலான கலை பண்பாட்டு திருவிழா போட்டிகள் முழுவதும் நடத்தி முடிக்கப்பட்டு இறுதி கட்ட கலை பண்பாட்டுத் திருவிழா போட்டிகளுக்கான நுழைவுப் பகுதிகள் டிசம்பர் 10ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் பள்ளி மாவட்ட அளவிலான போட்டிகள் ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் நவம்பர் மூன்றாம் தேதி வரையிலான நாட்களுக்குள் நடத்தி முடித்து மாவட்ட அளவில் தேர்ச்சி செய்யப்படும் மாணவர்களின் விவரத்தை மாநில திட்டத்தில் நவம்பர் 7ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இதனை தொடர்ந்து மாநில அளவிலான போட்டிகள் நவம்பர் 15 ஆம் தேதி முதல் நம்பர் 18 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மேலும் மாவட்ட அளவிலான போட்டிகளை நடத்த ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 15000 நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியை கொண்டு எந்த வித புகார்களும் இல்லாமல் சிறந்த நடுவர்களை தேர்வு செய்து கலை பண்பாட்டு திருவிழா போட்டிகளில் நடத்த வேண்டும். மேலும் போட்டிகளுக்கான வழிகாட்டுதல்கள் அதற்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பற்றி உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என ஒருங்கிணைந்த மாநிலத் திட்ட இயக்ககம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது.