தனியார் பள்ளிகளில் ஜாதி, மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
மீறி நடத்தினால் கடுமையான நடவடிக்கைக்கு சட்டத்தில் இடம் இருக்கிறது என்றும் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது. சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், ஆர்.எஸ்.எஸ் முகாம் நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தனியார் பள்ளிகளில் ஜாதி, மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரித்துள்ளது.
தனியார் பள்ளிகளில் அரசியல், சாதி, மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என ஏற்கனவே தடை உள்ளது. மீறி நடந்தால் பள்ளியின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் உள்ளது என சுட்டிக்காட்டியுள்ளது.