மத்திய அரசு புதிய பாடத்திட்டத்திற்கான கல்விக் கொள்கையை உருவாக 12 பேர் கொண்ட குழுவை ஏற்பாடு செய்துள்ளது. இக்குழுவின் தலைவராக முன்னாள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய தலைவர் கஸ்தூரிரங்கன் இருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இதன் உறுப்பினர்களாக தேசிய கல்வித் திட்டத்தின் நிறுவன வேந்தர் மகேஷ் சந்திர பந்த் மற்றும் புத்தக டிரஸ்ட் தலைவர் கோவிந்த் பிரசாத் சர்மா உள்ளிட்டோர் இடம்பெற்றிருப்பதாக தெரிவித்துள்ளனர். இப்பாடத்திட்டத்தில் பள்ளிக்கல்வி, தொடக்க கல்வி, ஆசிரியர் கல்வி, வயதுவந்தோர் கல்வி என 4 புதிய தேசிய பாடத்திட்டங்கள் இடம்பெறும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இது 16 ஆண்டுகளுக்கு பின் உருவாக்கப்படும் புதிய பாட திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.