Categories
மாநில செய்திகள்

பள்ளிகளில் மாணவர் விவரங்களில் அதிரடி மாற்றம்…. அமைச்சர் புதிய அறிவிப்பு….!!!

ள்ளிகளில் பதிவு செய்யப்படும் மாணவர் விவரங்களில் சாதி குறிப்பிடுவது குறித்து கல்வித்துறை அமைச்சர் விளக்கமளித்துள்ளார். 

சென்னையில் நேற்று செய்தியாளர்களுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியுள்ளதாவது, பள்ளிகளில் கல்வி மேலாண்மை தகவல் மையம் இணையதளத்தின் மூலமாக பதிவு செய்யப்படும் மாணவர்களின் விபரங்களில் குறிப்பிடுது பற்றி வெவ்வேறு விதமான விமர்சனங்கள் எழுந்துள்ளது.

ஏனென்றால் சாதி தெரிந்தால்தான் இட ஒதுக்கீட்டு மற்றும்  கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பலன்களை வழங்க முடியும் எனவும் மத்திய,மாநில அரசுத் திட்டங்களுக்கு செயல்படுத்த ஏதுவாக இருக்கும். அதனால் மாணவர் சேர்க்கையின் போது சாதியைச் சொல்லித்தான் ஆக வேண்டும் என்று பள்ளி நிர்வாகங்கள் கட்டாயப்படுத்தினால், அது தவறான நடவடிக்கை என்று கூறியுள்ளார்.

இதையடுத்து கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்தே மாணவர்களின் ஜாதியை பதிவு செய்யும் வழக்கம் இருந்து வருகிறது. ஆனால் திமுக ஆட்சி அமைந்த பின்,  விருப்பம் உள்ளவர்கள் மட்டும் சாதியை தெரிவிக்கலாம் என்றும் விருப்பமில்லாதவர்களின் கருத்துக்களையும் பதிவு செய்து வருகிறோம் என்று கூறினார். அதனைத்தொடர்ந்து மாணவரின் ஜாதியானது கல்வி மேலாண்மை தகவல் மையத்தை பொறுத்தவரையில் அதில் உள்ள டேட்டாபேஸ் பதிவில் இடம்பெற்றிருந்தது.

ஆனால் இனிமேல் அந்த பதிவில் மாணவரின் சாதி இருக்கக்கூடாது என்று திட்டமிட்டு உள்ளோம் .அந்தவகையில் மாணவரின் சாதியானது அவர் சார்ந்த பிரிவை மட்டும் அறிய பதிவு செய்யப்படுவதாகவும், எதிர்காலத்தில் அந்த மாணவனின் தகவல்களை தேடும்போது என்ன வகுப்பு என்பது மட்டும் வரவேண்டும் என்ற அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இதை அடுத்து வருகிற மே மாதத்திலிருந்து இந்த பிரச்சனை எந்த டேட்டா பதிவுகளிளும் இடம்பெறக்கூடாது என்ற வகையில் செயல்பட்டு வருகிறது.

மேலும் சுகாதாரத்துறை மூலமாக மாணவிகளின் உடல் நலம் சார்ந்த பிரச்சினை குறித்து சில கேள்விகள் பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது. அந்த கேள்விகளை மாணவர்களிடம் நேரடியாக கேட்கலாம் என்பது குறித்து ஆய்வு நடந்து வருகிறது. எனவே பெற்றோர்கள் அதை குறித்து பயப்பட தேவையில்லை எனவும் எதையுமே ஆராயாமல் செயல்படுத்த மாட்டோம் என்று கூறியுள்ளார். எது தேவையோ அதை மட்டும், மாணவிகள் சங்கடப்படும் வகையில் கேள்விகள் இடம் பெறாது என்று கூறியுள்ளார்.

மேலும் தமிழகத்தில் உள்ள 54 பள்ளிகளில் தமிழ் வகுப்பு நடைபெறவில்லை என செய்திகள் வெளியாகி உள்ளது. எனவே இதுகுறித்து விசாரணையில் ஈடுபடுத்த உத்தரவிட்டுள்ளார். அது உண்மை என தெரியும் பட்சத்தில், தமிழ் வகுப்பை குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும். அதன்பின் அதை வைத்துதான் அரசு வேலை வாய்ப்பு அல்லது இட ஒதுக்கீட்டில் பயன்படுத்த முடியும் என்று கூறியுள்ளார். அதேபோல சர்வர் கோளாறு பிரச்சனை கல்வி மேலாண்மை தகவல் மையத்தின் டேட்டா என்ட்ரி பதிவு பணிகளில் தொடர்ந்து சில இடங்களில் இருக்கிறது. எனவே அந்த பிரச்சனையை சரிசெய்ய விரைவில் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |