Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பள்ளிகளில் முகாம்…. மாணவர்களுக்கு பரிசோதனை…. மருத்துவ குழுவினரின் அறிவுரை…!!

பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்களின் உடல்நிலையை பரிசோதனை  செய்வதற்காக  பள்ளிகளில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்ட  நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் உடல்நிலையை பரிசோதிப்பதற்காக மாவட்ட தொழுநோய் குழு பள்ளிகளில் மருத்துவ முகாம் அமைத்துள்ளது. இந்நிலையில் ஒரத்தநாட்டில் உள்ள தூய மரியன்னை நடுநிலைப்பள்ளியில் தஞ்சை மாவட்ட தொழுநோய் குழு துணை இயக்குனர் டாக்டர் குணசீலன் மருத்துவ முகாமினை தொடங்கி வைத்துள்ளார்.

இதனையடுத்து பரிசோதனை செய்யப்பட்டதில் ஒரு சிறுவனுக்கு மட்டும் தொழுநோய் இருப்பது உறுதியானது. உடனடியாக அந்த மாணவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த தொழுநோய்க்கான அறிகுறிகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் தொழுநோய் அறிகுறிகள் இருப்பது தெரிந்ததால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லுமாறு அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |