Categories
மாநில செய்திகள்

பள்ளிகளில் முழு கட்டணம்….. கட்சிகள் இதையும் கவனிங்க….. இயக்குனர் புகார்…!!

பள்ளிகளில் முழு கட்டணம் வசூலிக்கப்படுவதாக  இயக்குனர் பேரரசு குற்றம் சுமத்தியுள்ளார்

நாடு முழுவதும் கொரோனா பரவ தொடங்கியதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பது இதுவரை அறிவிக்கப்படாத நிலையில் ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடந்து வருகின்றது. இந்நிலையில் பள்ளிகளில் முழு கட்டணம் வசூலிக்க படுவதாக இயக்குனர் பேரரசு குற்றம் சுமத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் “பள்ளிக்கூடம் திறக்கவில்லை, ஆசிரியர்கள் மாணவர்கள் செல்லவில்லை, ஆன்லைன் வகுப்பு தான் நடக்கிறது, ஆனால் அனைத்து பள்ளிகளிலும் முழு கட்டணம் வசூலிக்கப்படுகிறது” என தெரிவித்துள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு பெற்றோர்களின் சுமையைக் குறைப்பதற்கு உதவி செய்ய வேண்டும் எதுஎதற்கோ போராடும் கட்சிகள் இதற்கும் குரல் கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

Categories

Tech |