நெல்லை கிழக்கு மண்டல காவல் ஆணையராக இருந்த சுரேஷ் குமார் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அதனைத் தொடர்ந்து புதிய துணை ஆணையாளராக சீனிவாசன் நியமிக்கப்பட்டார். அவர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பதவி ஏற்றார். அதன்பிறகு மாவட்ட ஆட்சியரை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளரை சந்தித்து பேசிய அவர், நெல்லையில் பள்ளி மாணவர்களுக்கு இடையில் நடைபெறும் மோதலை தடுக்க ரோந்து பணி அதிகரிக்கப்படும். பள்ளிகளுக்கு அருகில் போதை வஸ்துகளை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் குற்றச் செயல்களை தடுக்கும் சட்டம், ஒழுங்கை நிலைநிறுத்தவும் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.