Categories
உலக செய்திகள்

பள்ளிகளுக்கு இன்று (ஏப்ரல்.4) விடுமுறை…. பிரபல நாடு வெளியிட்ட அறிவிப்பு…. குஷியில் மாணவர்கள்…..!!!!!

இந்தியாவில் கொரோனா தாக்கம் காரணமாக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக பல்வேறு தொழில்கள் பாதிப்படைந்து அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது. இப்போது கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது அனைத்து துறைகளும் இயல்புநிலைக்கு திரும்பியுள்ளது. மேலும் அரசின் நிதிநிலைமை ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. இருப்பினும் இலங்கையில் சென்ற 2020 ஆம் வருடம் மார்ச் மாதம் முதல் இலங்கையில் சுற்றுலா, தேயிலை உற்பத்தி மற்றும் ஆடை தயாரிப்பு ஆகிய தொழில்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளது.
இதனால் இன்னும் இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வருவதால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அத்துடன் பெட்ரோல், டீசல் விலையும் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி பலமணி நேரம் இங்கு மின்வெட்டு ஏற்படுகிறது. இந்த பொருளாதார நெருக்கடிக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே பொறுப்பேற்று பதவிவிலக வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே அவசர நிலையை அமல்படுத்தி இருக்கிறார். அந்த அடிப்படையில் இங்கு சென்ற 2ம் தேதி மாலை 6 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை என இலங்கை கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் வடக்கு, தெற்கு, வடமேற்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள பள்ளிகளுக்கு  இன்று (ஏப்ரல்.4) விடுமுறை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Categories

Tech |