தமிழகத்தில் கொரோனா காரணமாக இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடப்பு கல்வி ஆண்டில் வழக்கம் போல பள்ளிகள் திறக்கப்பட்டு மீண்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் குழந்தைகள் இடையே வைரஸ் ப்ளூ காய்ச்சல் அதிவேகமாக பரவி வருவதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் புதுச்சேரியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருவாரூர் மன்னார்குடியை சேர்ந்த ஒருவருக்கும் அகரநல்லூரை சேர்ந்த பள்ளி மாணவர் ஒருவருக்கும் பன்றி காய்ச்சல் உறுதியாகி உள்ளது. இன்ஃப்ளுயன்சா வைரஸை தொடர்ந்து மாணவர்களுக்கு தற்போது பன்றிக் காய்ச்சலும் உறுதியாகியுள்ளது. எனவே மாணவர்களின் உடல் நலனில் விளையாடாமல் உடனே ஒன்னும் முதல் ஒன்பதாம் வகுப்பு வரை விடுமுறை விட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.காய்ச்சல் தீவிரம் அதிகரிப்பதால் விடுமுறை விடுவது குறித்து அரசு விரைவில் ஆலோசனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது