Categories
மாநில செய்திகள்

பள்ளிகளுக்கு மட்டும் இன்று ( செப் 13) விடுமுறை…. எந்த மாவட்டம் தெரியுமா…? முக்கிய அறிவிப்பு….!!

ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தெற்கு ஒடிசா பகுதிகளில் நிலவியது. இது  நேற்று  காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு இழக்கக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில்  நேற்று  முதல் 15ம் தேதி வரையிலும் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (செவ்வாய்க்கிழமை) விடுமுறை என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்பி அறிவித்துள்ளார்.

Categories

Tech |