Categories
மாநில செய்திகள்

பள்ளிகளுக்கு விடுமுறையா…..? தமிழக அரசின் முடிவு இது தான்…!!!

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா அச்சுறுத்தி வந்தது. இதன் தாக்கம் தற்போது குறைந்ததால் மக்களும் நிம்மதியாக இருக்கிறார்கள். தற்போது தமிழகம் உட்பட பல்வேறு பகுதிகளிலும் புதிய வகை காய்ச்சல் பரவி வருகிறது. இதனை தடுக்க புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில்தமிழகத்தில் ஃப்ளூ காய்ச்சல் பரவலை தடுக்க பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “3 நாட்களில் சரியாகிவிடும் காய்ச்சலுக்கு எப்படி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க முடியும். குழந்தைகளை காப்பாற்ற வேண்டிய அவசியம் வந்தால், முதலில் அரசு அதைத்தான் செய்யும். தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய நிலை இல்லை” என விளக்கம் அளித்துள்ளார்.

Categories

Tech |