நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.
இந்நிலையில் ஒரு சில மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் சில மாநிலங்களில் பள்ளிகள் மட்டும் திறக்கப்படவில்லை. அந்த வகையில் மீண்டும் பள்ளிகளை திறக்க கோரி மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடக மாநில முதல்வர்களுக்கு ஐஐடி பேராசிரியர்கள், மருத்துவர்கள், பெற்றோர்கள் இணைந்து கடிதம் எழுதினர். அதில் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால் கற்றல் மற்றும் வளர்ச்சி இழப்புகள் அதிகரித்து வருகின்றன. கொரோனா ஜீரோ கேஸ் என்பது சாத்தியமில்லை. ஆனால் முறையான நடவடிக்கைகளுடன் அபாயங்களை எதிர்கொள்ள அணுகுமுறை இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.