ஒமைக்ரான் நோய் பரவல் வேகம் எடுத்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பள்ளிகள் இயங்குமா? என்ற கேள்விக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்துள்ளார்.
நெல்லை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முன்னிலையில் நேற்று ஆய்வு கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளதாவது: “நெல்லை மாவட்டத்தில் நடந்த சம்பவம் துரதிஷ்டவசமானது. இதுபோன்று இனி நடக்கா வண்ணம் அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
தமிழகத்தில் 25ஆம் தேதி முதல் ஜனவரி இரண்டாம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரான் பரவலால் பள்ளியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை செய்யப்பட்ட பிறகு பள்ளிகளில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் அறிவிப்பார். பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்” என்று அவர் தெரிவித்தார்.