பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற உயர்நீதிமன்றத்தின் கேள்விக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் பதிலளித்துள்ளார்.
மார்ச் மாதம் 23 ஆம் தேதி கொரோனா தொற்றினால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டது. தற்போது பல நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து மற்றும் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு நவம்பர் 11ம் தேதிக்குள் பள்ளிகள் திறக்கப்படும் தேதியை அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதற்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், “தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்கப்படாது. ஆந்திராவில் பள்ளிகள் அவசரப்பட்டு திறந்ததால் மாணவர்கள் தொற்றினால் பாதிக்கப்பட்டனர். எனவே தமிழ்நாட்டிலும் அத்தகைய சூழ்நிலை உருவாகக்கூடாது. மாணவர்களின் பாதுகாப்பு மிகவும் அவசியமான ஒன்று” என கூறியுள்ளார்.