Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பள்ளிகள் திறக்கப்படுமா?… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு… பெற்றோர்கள் மகிழ்ச்சி…!!!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி வருகின்ற ஒன்பதாம் தேதி கருத்து கேட்பு கூட்டம் மாநிலம் முழுவதும் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மாநிலம் முழுவதிலும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில், மத்திய அரசு பள்ளிகள் திறப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது. அதனால் பல்வேறு மாநிலங்கள் கடந்த மாதம் தொகுப்புகளை தொடங்கியுள்ளன. தமிழக அரசு அக்டோபர் 31ம் தேதியும் முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் அனைத்தும் நவம்பர் 16ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று அறிவித்திருந்தது.

அதிலும் குறிப்பாக 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் தொடங்கும் என்று அறிவித்தது. இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்படும் போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் பற்றி அமைச்சர் செங்கோட்டையன் அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த நிலையில் பள்ளிகள் திறப்பது பற்றி வருகின்ற ஒன்பதாம் தேதி கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது என தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழக அரசு சார்பாக இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், ” பள்ளிகள் திறப்பது பற்றி கருத்துக்களை பெறுவதற்கு வருகின்ற ஒன்பதாம் தேதி தமிழகம் முழுவதிலும் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும். அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தலைமையில் காலை 10 மணி அளவில் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் ஒன்பது முதல் பாடம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை பதிவு செய்யலாம். கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாதவர்கள் கடிதம் மூலமாக தங்கள் கருத்துகளை கூறலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |