Categories
தேசிய செய்திகள்

பள்ளிகள் திறப்பில் அவசரம் வேண்டாம்…. ஐசிஎம்ஆர் விஞ்ஞானி எச்சரிக்கை….!!!!

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை பாதிப்பு குறைவு என்றாலும், பள்ளிகள் திறப்பதில் அரசுகள் அவசரம் காட்ட வேண்டாம் என்று ஐ சி எம் ஆர் முன்னாள் விஞ்ஞானி டாக்டர் ராமன் கங்கா கேட்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், கொரோனா தாக்கத்தில் நீண்டகால பக்க விளைவுகளால் குழந்தைகளும் பாதிக்கப்படலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. பள்ளிகள் திறக்கப்படும் அதில் பரவலான அணுகுமுறை மட்டுமே தேவை.

ஒரு குறிப்பிட்ட பகுதியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பொறுத்து பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு செய்யலாம். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பலவீனமாக உள்ள பகுதிகளில் மூன்றாவது அலை ஏற்படலாம். கொரோனா வைரஸ் உடலின் ஒவ்வொரு உறுப்பிலும் தாக்கம் செலுத்தக் கூடியது. பள்ளிகளை திறப்பதில் அச்சம் நீக்கிய அணுகுமுறை தேவை.

அதனால் மாவட்ட நிர்வாகங்கள் பள்ளிகள் திறப்பது பற்றி முடிவெடுக்க வேண்டும். உள்ளூர் நிலவரங்கள் இன் படியே பள்ளிகளை திறக்க வேண்டும். கல்வியும் தேவைதான். ஆனால் நோய் -கல்வி இடையே சமச்சீரான அணுகுமுறை தேவை. கொரோனா பல பாடங்களை நமக்கு கற்று கொடுத்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |