Categories
அசாம் கொரோனா தேசிய செய்திகள்

பள்ளிகள் திறப்பு – அதிரடி தகவல்

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவ தொடங்கியதிலிருந்து, ஏறக்குறைய ஐந்து மாதங்களாக முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் ஊரடங்கு உத்தரவு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை இருக்கும் என்று மத்திய அரசு சார்பாக பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கொரோனா  குறைந்த பிறகு தான் பள்ளி கல்லூரிகள் திறக்கும் சூழல் உருவாகி உள்ளதால் மாணவர்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றன.

இதனிடையே கொரோனா பாதிப்பு பாதிப்பின் தன்மை பொறுத்து மாநில அரசாங்கங்கள் முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் அசாமில் பள்ளி கல்லூரிகளை செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் திறக்க முடிவு செய்துள்ளதாக அம்மாநில அமைச்சர் ஹிமந்தா பிசுவாஸ் தெரிவித்துள்ளார். ஆந்திராவில் செப்டம்பர் 5ஆம் தேதி முதல் பள்ளி திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் அடுத்த மாதத்தில் பள்ளி திறப்பது குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |