நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுபடுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்களின் நலன் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. பள்ளி மாணவர்களுக்கு அடுத்த கல்வி ஆண்டு தொடங்கி ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பள்ளிகளை திறப்பதற்கும், குழந்தைகளின் வெளி செயல்பாடுகளுக்கும் அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதே வழியாக அமையும் என எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குழந்தைகளுக்கு கல்வி வழங்குவதில் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து வெளியே வர தடுப்பூசியை சிறந்த வழி என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.