Categories
தேசிய செய்திகள்

பள்ளிகள் திறப்பு : மாணவர்களுக்கு ஊக்கத்தொகை கொடுக்கணும்….. மத்திய அரசு உத்தரவு…!!

அக்டோபர் 15 முதல் நாடு முழுவதும் பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து அதற்கான விதிமுறைகள் குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு நடவடிக்கை தற்போது வரை தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தளர்வுகளின் அடிப்படையில்,

மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பல செயல்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும், பள்ளி , கல்லூரி உள்ளிட்ட கல்வி வளாகங்கள் திறப்பது குறித்து தொடர்ந்து ஆலோசிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் நாடு முழுவதும், அக்டோபர் 15-ஆம் தேதி முதல் 10, 11, 12ஆம் வகுப்புகளை தொடங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க சூடாக சமைக்கப்பட்ட மதிய உணவு அல்லது அதற்கு ஈடான ஊக்கதொகை வழங்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டால், விதிகளை முறையாக பின்பற்றி நடவடிக்கை எடுப்பதற்கு, அவசரகால உதவி குழு, சுகாதார பரிசோதனைகள் குழு உருவாக்கப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

Categories

Tech |