தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வாரத்தில் ஆறு நாட்கள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத நிலையில், மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. மேலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால், பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு பரிசீலனை செய்தது.
அதனால் மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் 90 சதவீதம் பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இன்று முதல் தமிழகம் முழுவதிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப் படுகின்றன.
இதனையடுத்து பாடங்களை முடிக்க ஏதுவாக பள்ளிகள் வாரத்தில் ஆறு நாட்கள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. உடல் வெப்ப பரிசோதனை கருவிகள், கிருமி நாசினிகள், சோப்புகள், பல்ஸ்ஆக்ஸி மீட்டர்கள் போன்ற பொருட்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கட்டுப்பாட்டு மண்டலங்களில் வசிக்கும் மாணவர்கள்,ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பள்ளிக்கு வருகை புரிய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.