Categories
மாநில செய்திகள்

பள்ளிகள் திறப்பு : ஸ்தம்பித்த போக்குவரத்து….. கடும் நெரிசல்….!!!

கோடை விடுமுறைக்கு பிறகு இன்று தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பள்ளிக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டதால் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் பிரதான சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, தாம்பரம் ஜிஎஸ்டி சாலை, ஓஎம்ஆர் சாலை, கிழக்கு கடற்கரை சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

குறிப்பாக 8:30 மணி முதல் 10 மணி வரை அலுவலகத்திற்கு செல்பவர்கள் சாலையில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. மேலும் சென்னையில் எழும்பூர், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளில் மாணவர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Categories

Tech |