Categories
மாநில செய்திகள்

பள்ளிகள் திறப்பு… 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை… அமைச்சர் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடம் கலந்தாலோசித்த பிறகு முதல்வர் முடிவு செய்வார் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது வரை பள்ளி திறக்கப்படாததால் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிறு மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், “அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் பாடத்திட்டங்கள் ஒன்பதாம் வகுப்பு வரை 50 சதவீதமும், 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 35 சதவீதமும் குறைக்கப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகள் விருப்பப்பட்டால் அரையாண்டு தேர்வு ஆன்லைன் மூலமாக நடத்திக் கொள்ளலாம்.

பிறமாநில மாணவர்களுடன் போட்டியிட வேண்டும் என்பதால் 10 முதல் படம் வகுப்பு மாணவர்களுக்கு 65% பாடங்களை கற்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகள் திறப்பு பற்றி கல்வியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடம் கலந்தாலோசித்த பிறகு முதல்வர் முடிவு செய்வார்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |