தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து நாளை முதல் 1 முதல் 10 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. தலைமைச் செயலர் வெ இறையன்பு அறிவுறுத்தலின்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் தூய்மை பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனைத் தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளிகள் திட்டமிட்டபடி திறக்கப்படுமா? என்று சேலம் மாவட்டத்தில் ஆசிரியர்களிடம் கேட்டபோது, யு.கே.ஜி. முதல் 10 ஆம் வகுப்பு வரை நாளை முதல் பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெற்றோர்களுக்கு வாட்ஸ்அப் குரூப் மற்றும் எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில பள்ளிகளில் எல்கேஜி வகுப்புகள் மட்டும் இரண்டு நாள்கள் தள்ளிப் போடப்பட்டுள்ளது. அதன்படி எல்.கே.ஜி வகுப்புகள் திறக்கப்பட உள்ளது.
இத்தகைய முடிவு தனியார் பள்ளிகளில்தான் எடுத்துள்ளனர். ஆனால் அரசு பள்ளிகளை தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவு நாளை முதல் திறக்கப்பட உள்ளது என்று தெரிவித்தனர். அரசு பள்ளிகளில் எல்கேஜி யுகேஜி நடத்தப்படும் என்று மாறி மாறி அறிவிப்புகள் வெளியான பற்றி கேட்கப்பட்டது. அதற்கு, போதிய அளவில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டால் எந்த ஒரு சிக்கலும் வராது. புதிதாக எல்கேஜி, யுகேஜி என இரண்டு வகுப்புகளை அரசு பள்ளிகளில் தொடங்கிவிட்டு அதற்கு போதிய அளவில் ஆசிரியர்கள் நியமிக்கவில்லை என்றால், அந்த மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி விடும். மேலும் எல் கேஜி வகுப்புகளை அரசு பள்ளியில் நடந்த நடத்தப்படுவது வரவேற்கத்தக்கது. அதனை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். அதே நேரத்தில் அதற்கான உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர்.