Categories
தேசிய செய்திகள்

பள்ளிகள் திறப்பு… 50 ஆசிரியர்களுக்கு கொரோனா… பெற்றோர்கள் அச்சம்…!!!

கர்நாடக மாநிலத்தில் ஜனவரி 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் 50 ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், பள்ளிகளை திறப்பதற்கு அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து கர்நாடக மாநிலத்தில் ஜனவரி 1ம் தேதி பள்ளிகள் திறக்கப் பட்டது. ஆனால் பள்ளிகள் திறக்கப்பட்ட சில நாட்களிலேயே பல மாவட்டங்களை சேர்ந்த 50 ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களி டையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகபட்சமாக பெலகாவி மாவட்டத்தில் 22 ஆசிரியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து இந்த ஆசிரியர்களிடம் படித்த மாணவர்கள் மற்றும் உடன் பணியாற்றிய ஆசிரியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் சில மாவட்டங்களில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

Categories

Tech |