Categories
மாநில செய்திகள்

“பள்ளிகள் தொடங்கும் நேரம், முடியும் நேரம்”….. இவர்களே முடிவு செய்து கொள்ளலாம்….. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அரசு பள்ளி மாணவர்களுக்கு முதல் நாளிலேயே, விலையில்லா பாடப்புத்தகங்கள் போன்றவற்றை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 9.10 மணி முதல் மாலை 4.10 மணி வரை 8 பாடவேளைகளாக 1 நாளைக்கு 7 மணி நேரம் வகுப்புகள் நடத்த திட்டமிட்டு, அதற்கான அட்டவணை பள்ளிக்கல்வித்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

2022-23ம் கல்வியாண்டு நாட்காட்டியில் உள்ள நாட்களில், தலா 40 நிமிடங்களுக்கு 8 அமர்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளியின் அமைவிடம், போக்குவரத்து வசதிகள் ஆகியவற்றை கருத்தில்கொண்டு அந்தந்த தலைமை ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மைக் குழுக்களுடன் கலந்து ஆலோசித்து பள்ளி திறக்கும்/முடியும் நேரத்தை முடிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கல்வி ஆண்டு முதல் மாணவர்களின் திறனை வளர்க்கும் விதத்தில் கல்வி இணை செயல்பாடுகளில் (extra curricular activities) கூடுதல் கவனம் செலுத்துமாறு பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இலக்கிய போட்டி, சிறார் திரைப்படங்கள், வெளிநாட்டு கல்வி சுற்றுலா போன்ற பல்வேறு அறிவிப்புகளையும் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 20ம் தேதியும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 27ம் தேதியும் வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன.

Categories

Tech |