Categories
மாவட்ட செய்திகள்

பள்ளிகொண்டா சுங்கசாவடியில் நடந்த சோதனை…. “2 லட்சம் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்”…!!!

பள்ளிகொண்ட சுங்கசாவடியில் சோதனையின் போது இரண்டு லட்சம் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள சுங்க சாவடிகளில் பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தலைமையிலான குழுவில் சப்-இன்ஸ்பெக்டர் சிங்காரம் தலைமை காவலர் வினாயகம் மற்றும் போலீசார் உள்ளிட்டோர்கள் சோதனையில் ஈடுபட்டார்கள். அப்போது பெங்களூரில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது 20 மூட்டைகளில் குட்கா, கூல்லிப், ஹான்ஸ், பான் மசாலா உட்பட 135 கிலோ போதைப் பொருட்கள் இருந்தது.

பின் போலீசார் 2 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள போதை பொருட்களை காருடன் பறிமுதல் செய்து ஓட்டி வந்த கார் டிரைவரிடம் விசாரணை நடத்தியபோது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சிரோஹி மாவட்டத்தைச் சார்ந்த 31 வயதுடைய சாவாய் சிங் போதை பொருட்களை கடத்தி சென்றது தெரிய வந்திருக்கின்றது. இதைத் தொடர்ந்து அவரை போலீஸ் கைது செய்து அவரிடம் பெங்களூரில் யாரிடமிருந்து போதை பொருட்களை கடத்தி வந்தார் என்பதை விசாரித்து வருகின்றனர் போலீசார்கள்.

Categories

Tech |