நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் சில தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக அனைவரும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது வேதனை தருகிறது.
இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் பள்ளி கட்டணத்தை குறைக்கும் படி கேட்ட பெற்றோரை போய் சாகும்படி அம்மாநில கல்வித்துறை அமைச்சர் இன்டேர் சிங் பார்மர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தில் ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப் பட்ட போதிலும் முழு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுகுறித்து பெற்றோர் முறையிட்டபோது போய் சாவுங்கள் என காரில் புறப்பட்டு விட்டார்.