Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பள்ளிக்கல்வித்துறை சார்பில்…. உண்டு உறைவிட பள்ளி தொடங்க அனுமதி…. அறிவிப்பை வெளியிட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கிஸ்….!!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மத்திய திட்ட குழு போகலூர் ஒன்றியத்தில் உண்டு உறைவிட பள்ளி தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த உண்டு உறைவிட பள்ளி ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறையின் மூலம் நடைபெறும் எனவும் அரசு சாரா தொண்டு நிறுவனத்தின் மூலம் நடத்தப்பட உள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள தொண்டு நிறுவனத்தினர் இதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பிக்கக்கூடிய தொண்டும் நிறுவனம் சட்டப்படி பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

குறிப்பாக இந்த நிறுவனம் அரசால் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கக் கூடாது. மேலும் வருமான வரி விலக்கு சான்று பெற்றிருக்க வேண்டும். அதோடு அரசின் மானியம் பெற தனி அடையாளம் நிரந்தர கணக்கு எண் உள்ளிட்டவைகளை வைத்திருக்க வேண்டும். இதனை அடுத்து விண்ணப்பங்களை 10.10.22 ஆம் தேதிக்குள் கூடுதல் முதன்மை கல்வி அலுவலரிடம் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 20.10.22 ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை ராமநாதபுரம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |