Categories
மாநில செய்திகள்

பள்ளிக்கல்வி துறையில் நிர்வாக சீரமைப்பு… வெளியான முக்கிய முடிவு…!!!!!!

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் 67 மாவட்ட கல்வி அலுவலகங்கள் வருவாய் மாவட்டத்திற்கு ஒரு முதன்மை கல்வி அலுவலகம் இருந்தது. தொடக்க கல்வி இயக்குனர் கீழ் 32 மாவட்ட கல்வி அலுவலகங்களும் 17 மெட்ரிக் ஆய்வாளர் அலுவலகங்கள் என மொத்தம் 67 அலுவலகங்கள் இயங்கி கொண்டிருந்தது. இந்த சூழலில் மாற்றங்களை கொண்டு வரும் நோக்கத்தில் கடந்த ஆட்சியில் 67 ஆக இருந்த மாவட்ட கல்வி அலுவலகங்கள் 128 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கூடுதல் அதிகாரங்களும் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து தொடக்க கல்வி இயக்குனர் பள்ளி கல்வி இயக்குனரகத்துடன் இணைத்து மெட்ரிக் சிபிஎஸ்சி, ஐ சி எஸ் சி போன்ற தனியார் பள்ளிகளுக்கு என சுயநிதி பள்ளிகள் இயக்குனரகம் தொடங்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சூழலில் தற்போது ஆட்சியில் உள்ள திமுக தலைமையிலான அரசு நிர்வாக சீரமைப்பு மீண்டும் மாற்ற முயற்சி மேற்கொண்டு வருகின்றது. இந்த அரசு ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளை ரத்து செய்ய முடிவு செய்து இருக்கின்றது. ஏனென்றால் முந்தைய நிர்வாக முறையை மீண்டும் அமல்படுத்த கூடுதல் பணியாளர்கள் அலுவலர்கள் தேவை இதற்கு நிதி செலவு அதிகமாகும். அதனால் கடந்த ஆட்சியில் நடந்த நிர்வாக சீரமைப்புகளை ரத்து செய்வதற்கு நிதித்துறை அனுமதி வழங்குமாறு பள்ளி கல்வித்துறை நிதித்துறைக்கு கடிதம் எழுதி இருக்கிறது. இது பற்றி இரண்டு துறை அமைச்சர்களும் கலந்து ஆலோசத்தில் விரைவில் முடிவு எடுப்பார் என கூறப்படுகின்றது.

Categories

Tech |